TMCA செயற்குழு கூட்டம்

எல்லாம் வல்ல இறைவன் அருளாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தாலும், கடந்த 12.01.2012 வியாழக்கிழமை இரவு சரியாக 8 மணி அளவில் முர்காப் மன்னு சல்வா உணவகத்தில் நடந்தேறியது TMCA செயற்குழு கூட்டம்.

கூட்டத்தை ஜனாப் .M. முனீர் அஹமது M.A. அவர்கள் கிராஅத் ஓத, நபிமொழியினை (ஹதீஸ்) ஜனாப்.அப்துல் ஜலீல் அவர்கள் விரிவுரை செய்ய கூட்டம் இனிதே துவங்கியது.

பேரவையின் பொதுச் செயலாளர் திருமங்கலக்குடி ஜனாப். A. அப்துல் ரஹீம் அவர்கள் வரவேற்புரையும், கூட்டத்தின் அஜந்தா குறித்த விபரமும் வழங்கினார். பேரவை வருகிற மார்ச் மாதம் 21-ந் தேதி ஏற்பாடு செய்து உள்ள உம்ரா பயணம் குறித்து பேரவையின் பொருளாளர் ஜனாப். ஷாகுல் ஹமீது (கல்ஃப் ஏசியா) அவர்கள் அறிவிப்பு செய்தார்கள்.

பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் ஜனாப்.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இரத்த தான முகாம் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் வேண்டுகோள் உரை நிகழ்த்தி பேசினார்.

பேரவையின் தலைவர் ஆவூர் பஷீர் அஹமது அவர்கள் தனது துவக்க உரையில் தாயகத்திலிருந்து வருகை புரிந்தவர்கள் முன்னிலையில் நடந்த பதவி பிரமான நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சலுகைகளை அரசாங்கத்திடம் பெற வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக கோரிக்கை மனு சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார். மேலும், சேமிப்பு இல்லாத நம்மவர்கள் தாயகம் செல்ல (ஒரு வழி – One Way) நேர்ந்தால் என்ன செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு மெகா மாநாடு ஒன்றை பேரவை நடத்துவதற்கு வருகிற 24 பிப்ரவரி 2012 அன்று மறுதினம் நடக்கும் செயல் வடிவ ஆலோசனை கூட்டத்திற்கும் தாயகத்திலிருந்து வருகின்ற நிபுணர்கள் கொண்டு ஒரு பொருளாதார மேம்பாட்டு மாநாடு நடத்துவது குறித்து விபரங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார்கள். அதற்க்கான மாநாடு சிறப்புற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்து, ஜனவரி 6-ந்தேதி சால்மியா இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் நடந்து முடிந்த மருத்துவ முகாம் சிறப்புற நடந்தேறியதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் உதவுகிற வகையில் பேரவை கல்வி சேவையின் மகத்தான பணிக்கு நல அமைப்புகள் அனைத்தும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொருளாதார மேம்பாட்டு கூட்டம் குறித்து சிறப்புற நடத்துவதற்கு ஆலோசனைகள் பெறப்பட்டன. ஜனவரி 6-ந் தேதி நடந்த மருத்துவ முகாம் சிறப்புற நடந்தேறியதற்கு உறுதுணையாக இருந்து ஓத்துழைப்பு வழங்கிய சக நற்பணி அமைப்புகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு செய்தி தொடர்பாளர் S.M. ஆரிப் மரைக்காயர் அவர்கள் மற்றும் பேரவை நிர்வாகிகளின் சலாத்தினை வழங்கி கௌரவிப்பு செய்தார்கள்.

மிஸ்க் புரோகிராம் குறித்து முன்னறிவிப்பினை ஜனாப்.முனீர் அஹமது அவர்கள் அக்கூட்டத்தில் அறிவிப்பு செய்தார்கள். துணைச் செயலாளர் ஜனாப். ஹசன் முஹம்மது நன்றியுரைக்கு பிறகு ஜனாப் A. அப்துல் ரஜாக் அல்வானி அவர்களின் மஜ்லீஸ் துஆ- ஓதப்பட்டு மன்னு சல்வா விருந்தகத்தின் இரவு உணவகத்தோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Prize Giving Event Prize Giving Event Prize Giving Event

Prize Giving Event   Prize Giving Event